ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது!” ”ஃபுல் ஆக்ஷன் சார்… போலீஸ் பைக்ல அப்படியே வீலிங் பண்ணி ஒரு சுமோவை முட்டித் தூக்கிப் பறக்கவிட்டு, வில்லன் பறக்கிற ஹெலிகாப்டரை மோதி வானத்துல தீபாவளி கொண்டாடுறோம். கட் பண்ணா அடுத்த அசைன்மென்ட் அமெரிக்காவுல… இப்படி தயவுசெஞ்சு எதிர்பார்க்காதீங்க. இது வழக்கம்போல நம்ம ஸ்டைல் படம்தான். காமெடிக்கு நடுவுல ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு ஃப்ளேவர் கொஞ்சம் தூக்கலா இருக்கிற மாதிரி, இந்தப் படத்துல ஆக்ஷன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா தூக்கல். அவ்வளவுதான்” – கேப் கொடுக்காமல் கலகலக்கிறார் சினாகானா. முதல் போலீஸ் படம், முதல் ஆக்ஷன் படம் என சிவகார்த்திகேயன் ‘காக்கி சட்டை’யில் வருகிறார். ”காமெடி உங்களுக்கு நல்லா வருதுனு அந்தக் கோட்டைத் தாண்டாமலே படம் பண்றீங்களே… புதுப் புது முயற்சிகள் பண்ற ஐடியா இல்லையா?” ”இந்தா… இப்படியொரு கேள்வி கேட்டுப் புட்டீங்கள்ல! எல்லா ஏரியாவிலும் புகுந்து புறப்பட எனக்கும் ஆசைதான். அதுக்கான முதல் முயற்சி ப்ளஸ் பயிற்சிதான் ‘காக்கி சட்டை’. ‘இவன் பயங்கரமா கதை சொல்வான்’னு எதிர்பார்த்து யாரும் என் படத்துக்கு வர்றது இல்லை. ஜாலியா இருக்கும்னு வர்றாங்க. ...